spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணைகிறதா பார்த்திபன், வடிவேலு கூட்டணி?

மீண்டும் இணைகிறதா பார்த்திபன், வடிவேலு கூட்டணி?

-

- Advertisement -

மீண்டும் இணைகிறதா பார்த்திபன், வடிவேலு கூட்டணி?நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் பலரின் ஃபேவரிட் காமெடியனாக வலம் வந்தவர்.
தனது நகைச்சுவையால் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். அந்த வகையில் சரத்குமார், விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். சில காரணங்களால் சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பட வாய்ப்புகளும் இல்லாமல் போனது. அதன் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் வடிவேலுவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து வடிவேலுக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அதன்படி பகத் பாசில் உடன் இணைந்து வடிவேலு புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கின்றன.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில் வடிவேலுவை சந்தித்திருக்கிறார். இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பார்த்திபனும் வடிவேலுவும் இணைந்து ஏற்கனவே பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு, குண்டக்க மண்டக்க காதல் கிறுக்கன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தனர். பார்த்திபன், வடிவேலு காம்போ இணைந்தாலே அதில் நகைச்சுவை நிச்சயம் இருக்கும். அது ரசிகர்களை வெகுவாக கவரும்.மீண்டும் இணைகிறதா பார்த்திபன், வடிவேலு கூட்டணி?

we-r-hiring

தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைய போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் விரைவில் வடிவேலு, பார்த்திபன் கூட்டணி இணையும் வாய்ப்பு ஏற்படலாம் என்பது போல் தெரிவித்துள்ளார்.

எனவே ரசிகர்கள் மீண்டும் அந்த காம்போவையும், அவர்களின் காமெடியையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

MUST READ