நடிகர் தனுஷ் மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருவது மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து உலக அளவில் பெயர் பெற்றுள்ளார். இவரது நடிப்பில் தற்போது ‘இட்லி கடை’ எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. இதற்கிடையில் இவர், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ். இந்நிலையில் இவர் மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்திருக்கிறது. அதாவது ஏற்கனவே இவர் தெலுங்கில் ‘சார்’, ‘குபேரா’ ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில் இந்த இரண்டு படங்களுமே வணிகரீதியாக வெற்றி படமாக அமைந்தது. எனவே அடுத்தது இவர் தெலுங்கில் நடிக்க உள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தனுஷின் புதிய தெலுங்கு படத்தை இயக்குனர் வேணு உடுகுலா இயக்கப் போவதாகவும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.