லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் ஒரு ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர், எல்சியு என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி வருகிறார். இவ்வாறு தனக்கென தனி ஒரு ஸ்டைலை தன்னுடைய படங்களில் கொண்டு வந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் லோகேஷ். அடுத்தது இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் 171 வது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படமானது 2025 தீபாவளிக்கு திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் லோகேஷ் பாலிவுட்டில் களமிறங்கி அமீர் கான் நடிப்பில் தன்னுடைய கனவு திட்டமான இரும்புக்கை மாயாவி படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் அஜித்தை எப்போது இயக்குவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில்தான் லோகேஷ் கனகராஜ், நடிகர் தனுஷை இயக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி இருப்பதால் அதையெல்லாம் முடித்துவிட்டு லோகேஷ் இயக்கத்தில் நடிப்பார் என நம்பப்படுகிறது. மேலும் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -