தனுஷ் பட நடிகை ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராஸி திரைப்படம் 2025 செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சிவகார்த்திகேயன் விநாயக் சந்திரசேகரன், வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. அதாவது லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்தது கைதி 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோகேஷ் அதற்கு முன்பாக மற்றுமொரு படத்தை எடுக்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் கசிந்தது. எனவே அந்த படம் சிவகார்த்திகேயனின் படமாக இருக்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் எனவும் லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஸ்ருதிஹாசன் – லோகேஷ் கனகராஜ் ஆக இருவரும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலை தொடர்ந்து நட்பாக பழகி வருகின்றனர். இதன் காரணமாகவே லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனை கூலி திரைப்படத்திலும் நடிக்க வைத்தார். ஆகையினால் சிவகார்த்திகேயன் படத்தில் அவரை நடிக்க வைத்த திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் இணைந்து தனுஷின் 3 படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.