spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்தி இயக்குனர் உடன் ஹாட்ரிக் அடிக்கும் தனுஷ்… புதிய படத்தின் அசத்தல் அப்டேட்!

இந்தி இயக்குனர் உடன் ஹாட்ரிக் அடிக்கும் தனுஷ்… புதிய படத்தின் அசத்தல் அப்டேட்!

-

- Advertisement -

இந்தி இயக்குனர் உடன் தனுஷ் கூட்டணி அமைக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
2013 ஆம் ஆண்டில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தின் மூலம் இந்தி திரை உலகில் அறிமுகம் ஆனார் தனுஷ். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது.
முதல் வெற்றியை அடுத்து மீண்டும் இந்தக் கூட்டணி அட்ராங்கி ரே படத்திற்காக இணைந்தனர். அந்தப் படம் 2021 ஆம் ஆண்டில் நேரடி ஓடிடி வெளியீடாக இருந்தது. இந்தப் படத்திலும் தனுஷ் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில் தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் கூட்டணி ஹாட்ரிக் அடிக்க தயாராக உள்ளனர்.
“ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் அடுத்து ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷ் இருவரும் புதிய படத்திற்காக கூட்டணி அமைக்கின்றனர்.
இந்நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விமானப்படை கதைக்களத்தில் நடக்கும் காதல் கதையாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கிய பாலிவுட் நடிகை தான் கதாநாயகியாக நடிக்கப் போகிறாராம். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
விமானப்படை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதால் பெரிய பட்ஜெட் திரைப்படமாக இருக்கும் எனவும் படத்தில் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் பாகத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

MUST READ