Homeசெய்திகள்சினிமாவடிவேலு நடிக்க மறுத்த தனுஷ்... அடம் பிடித்து சம்மதம் பெற்ற மாரி செல்வராஜ்!?

வடிவேலு நடிக்க மறுத்த தனுஷ்… அடம் பிடித்து சம்மதம் பெற்ற மாரி செல்வராஜ்!?

-

தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இண்டாவது முறையாக புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். இந்தக் கூட்டணியில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனுஷின் Wunderbar Films நிறுவனமும் Zee Studios நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க மாரி செல்வராஜ் முடிவு எடுத்துள்ளார். ஆனால் தனுஷ் அதை மறுத்தாததாகக் கூறப்படுகிறது. சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் முதலில் வடிவேலு தான் நடித்து வந்தார். பின்னர் தனுஷுக்கும் வடிவேலுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் வடிவேலு படத்திலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

எனவே தான் இந்தப் புதிய படத்தில் வடிவேலுவை கொண்டுவர தனுஷ் மறுத்துள்ளார். ஆனால் மாரி செல்வராஜ் வடிவேலு கதாபாத்திரம் படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை கூறியுள்ளதால் தனுஷ் நடிக்க சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் வடிவேலு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

இதற்கியயில் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அடுத்து தனுஷ் உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ