spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ்.....அறிவிப்பு போஸ்டர் வெளியீடு!

இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ்…..அறிவிப்பு போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கியிருந்த அருண் மாதேஸ்வரன் இயக்கினார்.இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ்.....அறிவிப்பு போஸ்டர் வெளியீடு! கொடுக்கப்பட்டவர்களை கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத காலகட்டத்தில், அதாவது சுதந்திரப் போராட்டத்திற்காகவும் தங்களின் மரியாதைக்காகவும் போராடும் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக ஓரளவிற்கு வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்தபடியாக மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். அதாவது இந்த படம் அருண் மாதேஸ்வரனின் மற்ற படங்களைப் போல் அல்லாமல் இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படமாக உருவாக உள்ளது.இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ்.....அறிவிப்பு போஸ்டர் வெளியீடு! இந்த படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். ஏற்கனவே தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார் தனுஷ். இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ்.....அறிவிப்பு போஸ்டர் வெளியீடு!இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இளையராஜா, தனுஷ், கமல் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது இதன் அறிவிப்பு போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ்.....அறிவிப்பு போஸ்டர் வெளியீடு! இந்த போஸ்டர் நடிகர் தனுஷ் ஆர்மோனிய பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு மெட்ராஸ் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

MUST READ