Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் வைரலாகும் தனுஷின் 'குபேரா' பட முதல் பாடல்!

இணையத்தில் வைரலாகும் தனுஷின் ‘குபேரா’ பட முதல் பாடல்!

-

- Advertisement -

தனுஷின் குபேரா பட முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.இணையத்தில் வைரலாகும் தனுஷின் 'குபேரா' பட முதல் பாடல்!

தனுஷ் நடிப்பில் தற்போது இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இவர், பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் நடிகர் தனுஷின் 51 வது படமாகும். இதில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். தனுஷ் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இப்படம் அரசியல் திரில்லர் ஜானரில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து நிலையில், இன்னும் ஓரிரு காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே இப்படம் 2025 ஜூன் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘போய் வா நண்பா’ எனும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். விவேகா இதன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில் அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியது. அதேபோல் தனுஷ் – தேவி ஸ்ரீ பிரசாத் காம்போவில் உருவாகியுள்ள குபேரா படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ