Homeசெய்திகள்சினிமாசைலன்டாக தனது அடுத்த படத்தை தொடங்கிய தனுஷ்!

சைலன்டாக தனது அடுத்த படத்தை தொடங்கிய தனுஷ்!

-

- Advertisement -

நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தை சைலன்டாக தொடங்கியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.சைலன்டாக தனது அடுத்த படத்தை தொடங்கிய தனுஷ்!நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதேசமயம் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் குபேரா திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், ஒரு பிசியான இயக்குனராகவும் மாறியுள்ளார். சைலன்டாக தனது அடுத்த படத்தை தொடங்கிய தனுஷ்!அந்த வகையில் ராயன் படத்திற்கு பின்னர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் அருண் விஜய், அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை நடிப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை தேனியில் சைலன்டாக தொடங்கியுள்ளாராம் தனுஷ். சைலன்டாக தனது அடுத்த படத்தை தொடங்கிய தனுஷ்!மேலும் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நடிகர் தனுஷ் நடிப்பிலும் படம் இயக்குவதிலும் ஜெட் வேகத்தில் செல்கிறார் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ