தனுஷின் நடிப்பிலும் இயக்கத்திலும் உருவாகி உள்ள திரைப்படம் தான் ராயன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ ஆர் ரகுமானின் இசையிலும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவிலும் இந்த படம் உருவாகி இருந்தது. மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் தனுஷ் தவிர எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன், அபர்ணா பாலமுருளி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் ஏ ஆர் ரகுமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேசமயம் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் தனுஷுக்கு நிகரான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது நடிகர் தனுஷ் இதுவரை தனது அசுரத்தனமான நடிப்பினால் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களை இயக்குவதன் மூலம் ஒரு சிறந்த இயக்குனராகவும் சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் ராயன் திரைப்படமானது 5 நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -