Homeசெய்திகள்சினிமாஜூன் மாதத்தில் வெளியாகும் தனுஷின் 'ராயன்'!

ஜூன் மாதத்தில் வெளியாகும் தனுஷின் ‘ராயன்’!

-

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் தனது நடிப்பினாலும் திறமையினாலும் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். ஜூன் மாதத்தில் வெளியாகும் தனுஷின் 'ராயன்'!அதைத்தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் கடந்த 2017 இல் ப. பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, சரவணன், துஷாரா விஜயன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படம் கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் வெளியாகும் தனுஷின் 'ராயன்'!படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ராயன் திரைப்படத்தை மே மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் தேர்தலின் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி இப்படமானது ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பை பட குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ