கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்து வருகிறது. ரிலீசுக்கு தயாராகி வரும் வேளையில் அடுத்தடுத்த தடைகளை துருவ நட்சத்திரம் திரைப்படம் சந்தித்து வருகிறது. சமீபத்திலும் இப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடங்களில் துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று ரிலீஸாகாது என படக் குழுவினர் அறிவித்திருந்தனர். காரணம், கௌதம் வாசுதேவ் மேனன், ஆல் இன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரிடம், பெற்ற கடனை திருப்பி அடைத்தால் மட்டுமே துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று துருவ நட்சத்திரம் படத்திற்கு தடை விதிக்க கோரி மனு அளிக்கப்பட்டது. இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நவம்பர் 29ஆம் தேதிக்குள் பணத்தை கட்டிவிட்டு துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ரிலீஸ் செய்வோம் என கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஐந்து வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டோம் என்று கௌதம் மேனன் மிகுந்த வேதனையில் இருக்கிறார். அதேசமயம் அவருக்கு சிம்பு தரப்பிலும், தனுஷ் தரப்பிலும் பணம் தொடர்பான பல நெருக்கடிகள் தரப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைகளை விரைவில் முடித்துவிட்டு துருவ நட்சத்திரம் திரைப்படத்தினை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வெளியிட கௌதம் வாசுதேவ் மேனன் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.