நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம் நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வருடங்களை கடந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் மூலம் சூர்யா கொண்டாடப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கங்குவா படம் காலை வாரியது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்தது நடிகர் சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43 வது படமான புறநானூறு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். இந்த படமானது இந்தி திணைப்பை மையமாக கொண்ட கதையாகும். நடிகர் சூர்யா, புறநானூறு திரைப்படத்தில் கமிட்டாகி இருந்த அதே நேரத்தில் நடிகர் சூர்யாவிற்கு பாலிவுட் படமான கர்ணா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே புஇந்தி திணிப்பை அடிப்படையாகக் கொண்ட புறநானூறு படத்தில் நடித்துவிட்டு கர்ணா எனும் இந்தி படத்தில் நடித்தால் இந்தி மொழி ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது என்பதால் நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் தற்போது கர்ணா திரைப்படமும் கைவிடப்பட்டுவிட்டது. ஏற்கனவே நடிகர் சூர்யா ஒரு சில அரசியல் காரணங்களாலும் புறநானூறு திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்ணா படத்தை நம்பி புறநானூறு படத்தை கைவிட்ட சூர்யாவிற்கு தற்போது கர்ணா திரைப்படமும் கை கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- Advertisement -