spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகார்த்தியை சந்திக்க ஜப்பானில் இருந்து வந்த தீவிர ரசிகர்கள்!

கார்த்தியை சந்திக்க ஜப்பானில் இருந்து வந்த தீவிர ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகர் கார்த்தியை சந்திக்க ஜப்பானிலிருந்து தீவிர ரசிகர்கள் இருவர் சென்னை  வந்துள்ளனர்.

நடிகர் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக வளர்ந்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

we-r-hiring

பொன்னியின் செல்வனின் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரம் தான் படத்தின் மையக் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.படத்தில் கார்த்தி நடிப்பிற்கு பரவலாக பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

தற்போது கார்த்தி உலக அளவில் பல ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஆம், ஜப்பானிலிருந்து கார்த்தியின் தீவிர ரசிகர்களான டெருமி & ஐசாவ் சான் ஆகியோர் கார்த்தியை சந்திக்க இந்தியா வந்துள்ளனர். கார்த்தி அவர்களை வரவழைத்து சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப்  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரஜினியை அடுத்து ஜப்பானில் அதிகம் கொண்டாடும் தமிழ் நடிகராக கார்த்தி வளர்ந்துவிடுவார் என்று தெரிகிறதே!

MUST READ