spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிறுமி பாலியல் வன்கொடுமை... ஐஸ்வர்யா ரஜினி ஆதங்கம்...

சிறுமி பாலியல் வன்கொடுமை… ஐஸ்வர்யா ரஜினி ஆதங்கம்…

-

- Advertisement -
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபல இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 9வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், சிறுமியின் கொலை தொடர்பாகவும் தெரிவித்தார். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தீராப்பிரச்சனையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோல, பிரபல இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், இச்சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். கடும் கோபத்துடன் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், புதுச்சேரியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெண்கள் அனைவரும் சிவனிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இனிமேல் எந்த ஒரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், மனித ரூபத்தில் அலைந்து கொண்டிருக்கும் பிசாசுகள் கையில் பெண்கள் சிக்கி சிதைந்து போகக்கூடாது. இது போன்ற மனிதர்களை கடவுள் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். புதுவை சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை கேள்விப்பட்டதும் என்னுடைய இதயமே நடுங்கி விட்டது. பலியான சிறுமியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

MUST READ