Homeசெய்திகள்சினிமாபிரபல இயக்குநரும், நடிகருமான சூரியகிரண் மறைவு... திரைப்பிரபலங்கள் இரங்கல்...

பிரபல இயக்குநரும், நடிகருமான சூரியகிரண் மறைவு… திரைப்பிரபலங்கள் இரங்கல்…

-

- Advertisement -
இயக்குநரும், நடிகருமான சூரியகிரண் இன்று உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவருக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர், நடிகர் என பன்முகங்கள் கொண்டவர் சூரியகிரண். மௌன கீதங்கள், படிக்காதவன், உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி சினிமாவுக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிய சூரியகிரண், தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் அவர் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். இது தவிர, தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மாஸ்திரம், ராஜூ பாய், உள்பட பல படங்களை இவர் இயக்கி உள்ளார்.

தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி திரைப்படத்தை சூரியகிரண் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இவர், சமுத்திரம், காசி ஆகிய படங்களில் நடித்த கல்யாணியை திருமணம் செய்தார். கடந்த 2010-ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர் கருத்து வேறுபாடு காரணாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
இவர் குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதுகளையும், இயக்குநராக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில், இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

MUST READ