Homeசெய்திகள்சினிமாஇணையத்தை கலக்கும் அட்லீ - பிரியா தம்பதி... புகைப்படங்கள் வைரல்...

இணையத்தை கலக்கும் அட்லீ – பிரியா தம்பதி… புகைப்படங்கள் வைரல்…

-

- Advertisement -
கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை சென்று இன்று வெற்றி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. தமிழில் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி, அடுத்து ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த அட்லீக்கு அடுத்து ஏறுமுகம் தான். விஜய்யுடன் அடுத்தடுத்து பல படங்களில்ல கமிட்டாகினார்.
இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்து தெறிபடத்தை இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து பிகில் திரைப்படம் மற்றும் மெர்சல் திரைப்படங்களை இயக்கினார். இதில் மெர்சல் திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தமிழில் இருந்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ முதல் படத்தையே, இந்தி திரையுலகின் ஜாம்பவான் ஷாருக்கானை வைத்து இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து, பாலிவுட்டின் டாப் இயக்குநராக அட்லீயை முன்னிறுத்தியது. இத்திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டிலும் அடுத்தடுத்து படம் இயக்க திட்டமிட்டிருக்கிறார் அட்லீ. இதனிடையே, பட தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தெறி படத்தின் இந்தி ரீமேக்கை தற்போது தயாரித்து வருகிறார்.

இதனிடையே, 2014-ம் ஆண்டு அட்லீ தனது நீண்ட நாள் காதலி மற்றும் நடிகையுமான பிரியாவை திருமணம் முடித்துக்கொண்டார். இருவருக்கும் இந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், பிரியா மற்றும் அட்லீ தம்பதியினர், எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி டிரெண்டாகி வருகின்றன. இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்குகின்றன.

MUST READ