Homeசெய்திகள்சினிமாஏன் பிரகாஷை காட்ட வேண்டும்.... 'விடாமுயற்சி' படத்தின் அந்த கேரக்டர் குறித்து மகிழ் திருமேனி!

ஏன் பிரகாஷை காட்ட வேண்டும்…. ‘விடாமுயற்சி’ படத்தின் அந்த கேரக்டர் குறித்து மகிழ் திருமேனி!

-

- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படம் அஜித்தின் 62 வது படமாகும். ஏன் பிரகாஷை காட்ட வேண்டும்.... 'விடாமுயற்சி' படத்தின் அந்த கேரக்டர் குறித்து மகிழ் திருமேனி!லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படம் கடந்த பிப்ரவரி 6 அன்று நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்திருந்தார்கள். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி, விடாமுயற்சி படத்தின் அந்த பிரகாஷ் கேரக்டர் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித்தும் – திரிஷாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் நிலையில் திடீரென நடிகை திரிஷா, தனக்கு வேறொரு காதலன் (பிரகாஷ்) இருப்பதாக அஜித்திடம் கூறி அவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறார். ஏன் பிரகாஷை காட்ட வேண்டும்.... 'விடாமுயற்சி' படத்தின் அந்த கேரக்டர் குறித்து மகிழ் திருமேனி!தன் மனைவியின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்காத அஜித், கடைசியாக ஒரு முறை நானே உன்னுடைய அம்மா வீட்டிற்கு அழைத்து சென்று விடுகிறேன் என்று சொல்லி காரில் திரிஷாவை அழைத்துச் செல்கிறார். அப்போது அர்ஜுன், திரிஷாவை கடத்தி செல்கிறார். அதைத்தொடர்ந்து அஜித், திரிஷாவை பல போராட்டங்களுக்குப் பிறகு காப்பாற்றுகிறார். எனவே தன்னை கஷ்டப்பட்டு காப்பாற்றும் அஜித் தன்னை எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட திரிஷா இறுதியில் அஜித்துடன் இணைந்து விடுகிறார். எனவே இந்த கதையில் யார் அந்த பிரகாஷ்? என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த பிரகாஷ் கதாபாத்திரத்தை படத்தில் காட்டவே இல்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். ஏன் பிரகாஷை காட்ட வேண்டும்.... 'விடாமுயற்சி' படத்தின் அந்த கேரக்டர் குறித்து மகிழ் திருமேனி!இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் பேசிய மகிழ் திருமேனி, “இதை நாம் இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று உண்மையில் பிரகாஷ் என்ற கதாபாத்திரம் இருக்கிறது. மற்றொன்று திரிஷா, தன்னைத் திருமண பந்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள சொன்ன பொய்யாக கூட எடுத்துக் கொள்ளலாம். அப்படி உண்மையிலேயே திரிஷாவிற்கு வேறு ஒரு பந்தம் இருந்திருந்தாலும் கூட ஒரு பெண் திருமண பந்தத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது என்ன காரணமாக இருந்தாலும் அதற்கான உரிமையும் அதிகாரமும் அந்த பெண்ணிற்கு உண்டு. அதற்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.ஏன் பிரகாஷை காட்ட வேண்டும்.... 'விடாமுயற்சி' படத்தின் அந்த கேரக்டர் குறித்து மகிழ் திருமேனி! இது தான் இந்த படத்தில் நாங்கள் சொல்ல வந்த விஷயம். படத்தில் ஏன் பிரகாஷை காட்ட வேண்டும்? நாங்கள் இந்த படத்தில் அஜித் – திரிஷாவின் காதல் கதை தான். பிரகாஷை பற்றிய கதை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ