கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான கூழாங்கல் எனும் திரைப்படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் தான் கொட்டுக்காளி. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் நிலையில் நடிகர் சூரி படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அன்னா பென் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது சக்திவேலின் ஒளிப்பதிவிலும் கணேஷ் சிவாவின் எடிட்டிங்கிலும் உருவாகி இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிடையாது. லைவ் சவுண்டை வைத்து தான் படத்தின் பின்னணி இசை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேசமயம் படமானது வருகின்ற ஆகஸ்ட் 23 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 13) படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. எனவே டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் அந்த விழாவில் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குனர் மிஷ்கின், அன்னா பென் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மிஸ்கின், “நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் புதிய பட பூஜையில் கலந்து கொண்ட போது வெள்ளை சட்டை போட்டு ஒரு பையன் கிராமத்தில் இருந்து வந்தவன் மாதிரி அமர்ந்திருந்தான். அவனிடம் யாருப்பா நீ என்று கேட்டேன். சார் நான் வினோத். கூழாங்கல் படத்தை எடுத்திருக்கேன் சார் என்று சொன்னான். சரி அடுத்த படத்தை மெதுவா எடுப்பான் வாயைத் திறக்கறதுக்குள்ள இன்னொரு படம் ஆரம்பிச்சுட்டேன் சார் என்று சொன்னான்.
“#Kottukkaali: I’m ready to do a NAKED dance to reach the movie. There is no music director in the movie, which was like the director beat me in the SLIPPER. I’m ready to KISS director VinothRaj’s Feet” – Mysskin pic.twitter.com/KJXqq02Hdh
— AmuthaBharathi (@CinemaWithAB) August 13, 2024
மியூசிக் யார் பண்றான்னு கேட்டேன். யாருமே மியூசிக் பண்ணலன்னு சொன்னான். என்ன இவன் பெரிய இவன் மாதிரி பேசுறான்னு வீட்டுக்கு வந்துட்டேன். ஆனால் கொட்டுக்காளி படத்தை பார்த்த பின்னர் தான் தெரிந்தது வினோத் என்னை செருப்ப கழட்டி அடிச்சிருக்கிறான். இந்த படத்தை மக்கள் கட்டாயம் வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக நான் அவுத்து போட்டு கூட நடனமாட தயார்” என்று தொடர்ந்து பலரும் முகம் சுளிக்கும் விதமாக பேசியிருந்தார் மிஸ்கின்.