Homeசெய்திகள்சினிமாகள்ளக்குறிச்சியில் மரண ஓலம்... இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்...

கள்ளக்குறிச்சியில் மரண ஓலம்… இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்…

-

- Advertisement -
 கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதில் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயரிழந்து வருகின்றனர். இதுவரை 37 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
இச்சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியும் பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநரும், சமூக ஆர்வலருமான பா.ரஞ்சித், கள்ளிக்குறிச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ