spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிடுதலை 2 நடிகர்களுக்கு ஊதியம் நிலுவை... நள்ளிரவில் நடிகர்கள் வாக்குவாதம்...

விடுதலை 2 நடிகர்களுக்கு ஊதியம் நிலுவை… நள்ளிரவில் நடிகர்கள் வாக்குவாதம்…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவை மாறுபட்ட பாதையில் அழைத்துச் சென்றவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் விடுதலை முதல் பாகம். நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு, படப்பிடிப்புகள் சிறுமலை பகுதியில் தொடங்கப்பட்டது. மேலும் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பொள்ளாச்சி பகுதியில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்ட துணை நடிகர்களுக்கு, பேசிய ஊதியத்தை வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி துணை நடிகர்கள் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

MUST READ