- Advertisement -
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கிசிச்சை பலனின்றி அவர் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரை நட்சத்திரங்களும், நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் படப்பிடிப்பில் சிக்கிக் கொண்ட அனைத்து பிரபலங்களும் தற்போது அவரது நினைவிடம் சென்றும், அவரது இல்லத்திற்கு சென்றும் அஞ்சலி செலுத்துகின்றனர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.




