- Advertisement -
தனுஷ் நடிக்கும் 51-வது படத்தின் படப்பிடிப்பால் திருப்பதி பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கி இன்று வரை இந்திய திரையுலகில் ரசிகர்களின் மனதை துள்ள வைக்கும் நாயகன் நடிகர் தனுஷ். அவரது சினிமா பயணத்தின் தொடக்கத்தில் அவர் சந்தித்தது அனைத்தும் விமர்சனங்கள் மட்டுமே. ஆரம்ப காலத்தில் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து, இன்று இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். கோலிவுட் எனும் கோட்டையில் கொடி நாட்டிய இந்த நாயகன், இன்று டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என இறக்கை கட்டி பறக்கிறார்.


அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இதையடுத்து, தனுஷ் திரைப்படம் இயக்கி வருகிறார். அதே சமயம், தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படத்திலும் அவர் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.



