நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கி வரும் குபேரா படத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இளையராஜாவாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதேசமயம் இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை எழுதப்போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால் நடிகர் தனுஷே திரைக்கதையை எழுதி இருக்கிறாராம். மேலும் அருண் மாதேஸ்வரன் தான் இந்த படத்திற்கு இயக்குனர் என்று சொன்னாலும் தனுஷ் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. தனுஷ் ஏற்கனவே இளையராஜாவின் தீவிர பக்தன். இளையராஜாவாக நடிக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் கனவு. இந்நிலையில் நடிகர் தனுஷ் இளையராஜாவின் பயோபிக் படத்திற்கு தானே திரைப்பதை எழுதி, இயக்கி, நடிக்க இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
எனவே நடிகர்கள் தனுஷ் இளையராஜாவின் பயோபிக் படத்தை தனது நடிப்பினாலும் தனது திறமையினாலும் வேறொரு பரிமாணத்தில் கொண்டு தனது திறமையினாலும் வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -