spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவைபவ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் என்னன்னு தெரியுமா?

வைபவ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் என்னன்னு தெரியுமா?

-

- Advertisement -

வைபவ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் என்னன்னு தெரியுமா?நடிகர் வைபவ் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028- 2, சரோஜா, கோவா போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றவர். மேலும் கப்பல், மேயாத மான், பபூன், லாக்கப் , மலேசியா டு அம்னீசியா போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். கடைசியாக இவர் ஆலம்பனா
திரைப்படத்தில் நடித்துள்ளார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வைபவ் முனீஸ் காந்த், பார்வதி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிலீஸ் க்கு தயாராகி வந்து கொண்டிருந்த இந்த படமானது ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.வைபவ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் என்னன்னு தெரியுமா?

இதைத்தொடர்ந்து நடிகர் வைபவ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை விக்ரம் ராஜசேகர் இயக்குகிறார். இதில் வைபவுக்கு ஜோடியாக நடிகை அதுல்யா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜை உடன் தொடங்கப்பட்டன. இந்நிலையில் படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படத்திற்கு சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு அசத்தியுள்ளனர்.

MUST READ