குட் பேட் அக்லி படத்தில் டாக்டர் பட வில்லன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்த நிலையில் இப்படம் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்த்த அளவில் ஈக்கவில்லை. எனவே இதைத்தொடர்ந்து வெளியாக உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மூலம் அஜித்தை கொண்டாடி தீர்க்க வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த படத்தின் டீசரும் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான OG சம்பவம் பாடலில் இடம்பெற்ற ஒவ்வொரு வரிகளும் அஜித் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் தந்தது. இவ்வாறு இப்படம் தொடர்பாக வெளியாக ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் டாக்டர் பட வில்லன் ஒருவர் இணைந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் வில்லன் கும்பலை சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக படித்திருந்த ரகுராம் குட் பேட் அக்லி படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. அதாவது இவர்தான் மெயின் வில்லன் என்று தகவல் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே அர்ஜுன் தாஸ் தான் மெயின் வில்லனாக நடிக்கிறார் என செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

குட் பேட் அக்லி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.