spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்த வாரம் டபுள் எவிக்ஷனா?.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்படும் அந்த இரண்டு பிரபலங்கள்!

இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?…. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்படும் அந்த இரண்டு பிரபலங்கள்!

-

- Advertisement -

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்களும் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது ஏழாவது சீசன் தொடங்கி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்படும் அந்த இரண்டு பிரபலங்கள்!

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ஐம்பதாவது நாள் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் தற்போது 55 வது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் பிக் பாஸ் வீட்டினுள் விசித்திரா, கூல் சுரேஷ், விஜே அர்ச்சனா, ரவீனா, பிராவோ, அக்ஷயா, பூர்ணிமா, மாயா, நிக்சன் ஆகியோர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் கொடுத்துள்ள டாஸ்க்கில் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால் ஏற்கனவே எலிமினேட் ஆனவர்கள் வைல்கார்டு என்ட்ரி மூலமாக உள்ளே வரப் போகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

we-r-hiring

அதே சமயம் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாகவும் அதில் அக்ஷயா மற்றும் பிராவோ இருவரும் வெளியேற இருப்பதாகவும் கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சீசனிலும் டபுள் எவிக்ஷன் முறை பின்பற்றப்பட்டதால் இந்த முறையும் அதைப் பின்பற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் விஜே அர்ச்சனா, மணி, ரவீனா, விசித்ரா உள்ளிட்டோரும் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ