சூர்யா 46 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் இவர் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் இவர், வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக சமீப காலமாக தகவல் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சூர்யா 46 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிகை மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் படக்குழு அனுபமா பரமேஸ்வரனிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். மமிதா, அனுபமா ஆகிய இருவரில் யாரிடம் கால்ஷீட் கிடைக்கிறதோ அவரை படத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், நிதி அகர்வால் ஆகியோர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படத்தில் எந்த நடிகை நடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.