spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவர் மட்டும் சினிமாவுக்கு திரும்ப வந்தாருன்னா..... விஜய் குறித்து 'டிராகன்' பட இயக்குனர்!

அவர் மட்டும் சினிமாவுக்கு திரும்ப வந்தாருன்னா….. விஜய் குறித்து ‘டிராகன்’ பட இயக்குனர்!

-

- Advertisement -

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தற்போது ஜனநாயகன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. அரசியல்வாதியாக உருவெடுத்துர்க்கும் விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.அவர் மட்டும் சினிமாவுக்கு திரும்ப வந்தாருன்னா..... விஜய் குறித்து 'டிராகன்' பட இயக்குனர்! இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் விஜய் இந்த படத்துடன் சினிமாவை விட்டு விலகுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, விஜய் குறித்து பேசி உள்ளார்.

அதாவது ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. இவருடைய முதல் படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அதை தொடர்ந்து இவர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்த நிலையில் இந்தப் படமும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. அவர் மட்டும் சினிமாவுக்கு திரும்ப வந்தாருன்னா..... விஜய் குறித்து 'டிராகன்' பட இயக்குனர்!இதன் பின்னர் அஸ்வத் மாரிமுத்து, சிம்புவின் 51வது திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, நடிகர் விஜயின் கில்லி படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் மீண்டும் சினிமாவிற்கு திரும்ப வந்தால் அவருடைய வீட்டு வாசலில் முன் ஸ்கிரிப்டுடன் நிற்கும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

MUST READ