spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரோபோவிடம் சேட்டையை காட்டிய 'டிராகன்' பட இயக்குனர்.... வைரலாகும் வீடியோ!

ரோபோவிடம் சேட்டையை காட்டிய ‘டிராகன்’ பட இயக்குனர்…. வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

டிராகன் பட இயக்குனரின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ரோபோவிடம் சேட்டையை காட்டிய 'டிராகன்' பட இயக்குனர்.... வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. இவர், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை கொடுத்து தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். அதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இவர் இயக்கியிருந்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் இந்த படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன் பின்னர் அஸ்வத் மாரிமுத்து, சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். சிம்புவின் 51வது படமான இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இப்படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்துவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

we-r-hiring

அதாவது அஸ்வத் மாரிமுத்து துபாயில் ரோபோ ஒன்றிடம் என்னுடைய டிராகன் படம் பார்த்து இருக்கிறாயா? ‘கும்தலக்கடி கலகலகல’ என்ற பாடல் பற்றி தெரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு தன்னுடைய சேட்டையை காட்டியுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் இவர் ரோபோக்கே டஃப் கொடுக்கிறாரு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ