Homeசெய்திகள்சினிமாதிரையரங்குகளில் வெற்றி நடைபோடும் 'டியூட்'.... ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!

திரையரங்குகளில் வெற்றி நடைபோடும் ‘டியூட்’…. ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!

-

- Advertisement -

டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.திரையரங்குகளில் வெற்றி நடைபோடும் 'டியூட்'.... ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் ‘டியூட்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கி இருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்திருந்தார். மமிதா பைஜு, ரோகினி, சரத்குமார் மற்றும் பலர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களை போல் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வழக்கம்போல் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஃபுல் எனர்ஜியுடன் நடித்து அசத்தியிருந்தார்.திரையரங்குகளில் வெற்றி நடைபோடும் 'டியூட்'.... ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ! கலகலப்பான பொழுதுபோக்கு படமாக வெளியான இந்த படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில் ரூ.27 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ