Homeசெய்திகள்சினிமா25வது நாளில் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்'!

25வது நாளில் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

-

- Advertisement -

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் 25வது நாளாக வெற்றி நடை போடுகிறது.
25வது நாளில் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்'!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் தற்போது தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இவரது நடிப்பில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படம் தமிழில், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட், பார்ச்சூன் ஃபோர், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ்
ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, ராம்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 25வது நாளில் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்'!இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையரங்குகளில் இன்று வரையிலும் வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படம் சுமார் 111 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகிறது. இதனை படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படம் இன்றுடன் (நவம்பர் 23) 25ஆவது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ