Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போகும் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' ரிலீஸ்.... சோலோவாக சம்பவம் செய்ய வரும் விஜய்!

தள்ளிப்போகும் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ரிலீஸ்…. சோலோவாக சம்பவம் செய்ய வரும் விஜய்!

-

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.தள்ளிப்போகும் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' ரிலீஸ்.... சோலோவாக சம்பவம் செய்ய வரும் விஜய்!

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சீதாராமம் என்ற படத்திற்கு பிறகு நடிகர் துல்கர் சல்மான் பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளார். தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக கிங் ஆப் கொத்தா எனும் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர் கல்கி 2898AD திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் காந்தா போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிமிஸ் ரவி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இப்படமானது 2024 செப்டம்பர் 27 அன்று வெளியாக இருப்பதாக தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.தள்ளிப்போகும் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' ரிலீஸ்.... சோலோவாக சம்பவம் செய்ய வரும் விஜய்! பின்னர் ஒரு சில காரணங்களால் அறிவித்த தேதிக்கு முன்னதாகவே செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 7 லிருந்து தள்ளிப் போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. எனவே போட்டியின் காரணமாக லக்கி பாஸ்கர் திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

MUST READ