துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் துல்கர் சல்மான் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதே சமயம் சீதாராமம் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, ராம்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாதாரண நபராக இருக்கும் கதாநாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி எப்படி கோடீஸ்வரனாக மாறுகிறான் என்பதை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியை முதன்மையாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தாலும் மற்ற மொழிகளிலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
𝟏 𝐁𝐈𝐋𝐋𝐈𝐎𝐍 𝐑𝐔𝐏𝐄𝐄𝐒 𝐆𝐑𝐎𝐒𝐒 𝐖𝐎𝐑𝐋𝐃𝐖𝐈𝐃𝐄 💰💵
The 𝐌𝐄𝐆𝐀 𝐁𝐋𝐎𝐂𝐊𝐁𝐔𝐒𝐓𝐄𝐑 #LuckyBaskhar made it to the TOP, With a 100% strike rate at the Box-Office. 🏦
Watch #BlockbusterLuckyBaskhar at Cinemas Near you! 🤩@dulQuer… pic.twitter.com/JYS05A9f05
— Sithara Entertainments (@SitharaEnts) November 14, 2024
அதன்படி இப்படம் தற்போது வரை 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர். மேலும் துல்கர் சல்மான், கிங் ஆப் கொத்தா திரைப்படத்தில் இழந்த வெற்றியை தற்போது லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்தின் மூலம் மீட்டெடுத்துள்ளார். இனிவரும் நாட்களிலும் இந்த படத்தில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.