Homeசெய்திகள்சினிமாடன்கி படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு

டன்கி படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு

-

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள டன்கி படத்தின் ட்ரைலர் நாளை வௌியாகிறது.

இந்திய திரையுலகின் கிங்கானாக அறியப்படுபவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் அண்மையில் வௌியான திரைப்படம் ஜவான். தமிழ் இயக்குநர் அட்லீ இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வௌியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியானது. விமர்சனங்கள் ரீதியாக மட்டுமன்றி வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ஷாருக்கான் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் டன்கி. இப்படத்தை ராஜ்குமார் ஹிராணி இயக்கி இருக்கிறார். படத்தில் சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா, டாப்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வௌியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் ட்ரைலர் நாளை வௌியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 21-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான பதான், ஜவான் ஆகிய இரு படங்களும் மாபெரும் ஹிட் என்பதால், டன்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

MUST READ