spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு.... முடிவை மாற்றும் சிம்பு.... கைமாறும் 'STR 49'?

தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு…. முடிவை மாற்றும் சிம்பு…. கைமாறும் ‘STR 49’?

-

- Advertisement -

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு.... முடிவை மாற்றும் சிம்பு.... கைமாறும் 'STR 49'?இந்த படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இது தவிர சிம்பு, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50 படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதில் STR 49 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாகவும், சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானம், கயடு லோஹர் ஆகிய வரும் நடிக்க உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு.... முடிவை மாற்றும் சிம்பு.... கைமாறும் 'STR 49'? இந்த சம்பவத்திற்கு பிறகு ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இட்லி கடை, பராசக்தி, இதயம் முரளி ஆகிய படங்களின் நிலை என்ன? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. மேலும் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரையும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்க இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. எனவேதான் சிம்பு, வேறொரு யோசனையில் இருக்கிறாராம். அதாவது தன்னுடைய STR 49 படத்தை இதே நிறுவனத்துடன் தொடரலாமா? அல்லது வேறொரு நிறுவனத்தை அணுகலாமா? என்ற யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ