கடந்த 2022 இல் சூர்யா, பிரியங்கா மோகன், வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. இதைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் ஜெயம் ரவி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதன்படி இந்த படம் கிராமத்து கதை களத்தில் உருவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ், விஜய் சேதுபதியை இயக்கப் போவதாகவும் இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இயக்குனர் பாண்டிராஜ் முதலில் ஜெயம் ரவி திரைப்படத்தை இயக்குவாரா? அல்லது விஜய் சேதுபதி திரைப்படத்தை இயக்குவாரா? அல்லது இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.