Homeசெய்திகள்சினிமாசரவெடியான சர்ப்ரைஸ்...... விஜயின் 50வது பிறந்தநாளில் 'கோட்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

சரவெடியான சர்ப்ரைஸ்…… விஜயின் 50வது பிறந்தநாளில் ‘கோட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் விஜய் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.சரவெடியான சர்ப்ரைஸ்...... விஜயின் 50வது பிறந்தநாளில் 'கோட்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இதில் விஜய் தவிர பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி, வைபவ், பிரேம்ஜி என பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே செப்டம்பர் 5 வெளியாக இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அடுத்ததாக விசில் போடு எனும் பாடலும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்நிலையில் இன்று விஜயின் 50வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு படத்தின் சின்ன சின்ன கண்கள் எனும் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதே சமயம் விஜயின் இந்த 50வது பிறந்த நாளை இன்னும் ஸ்பெஷலாக மறக்க முடியாத நாளாக மாற்ற ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளனர் கோட்பட குழுவினர்.

அதன்படி கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த முன்னோட்டத்திலும் டி ஏஜிங் மூலம் விஜய் இளமையான தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. மேலும் விஜயின் பிறந்த நாளை ரசிகர்கள் பலரும் வெகு விமர்சையாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ