தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து நிற்கிறார் தளபதி விஜய். தொடக்கத்தில் தன் தோற்றத்திற்காக விமர்சிக்கப்பட்டாலும் அதன் பின் மக்களின் நெஞ்சங்களை தன் நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் கவரும் ஒரு வசீகர சக்தியாக மாறினார். இளைய தளபதியாக எல்லாருக்கும் பரீட்சயமாகி பின் தளபதியாக வளர்ச்சி பெற்றுள்ளார்.
சினிமா பின்புலத்தில் இருந்து பல நடிகர்கள் திரைத்துறையில் எளிதாக வாய்ப்பு பெற்றிருந்தாலும் அதில் நீண்ட காலம் நிலைத்து நிற்பவர்கள் சிலரே. அதிலும் உச்ச நட்சத்திரமாக தனித்து நிற்கிறார் தளபதி. ஒவ்வொரு ரசிகனும் இவரை ஒரு நடிகராக பார்க்காமல் தன் குடும்பத்தில் ஒருவராக, அண்ணனாக, இன்ஸ்பிரேஷனாக பார்க்கும் அளவுக்கு மக்களின் அன்பை பெற்றவர்.
சினிமா என்பது கலையும் வியாபாரமும் இணைந்தது என்பதை உணர்ந்து வசூல் ரீதியில் இவரது சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சினிமாவில் வளர்ச்சி என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய அசுர பாய்ச்சலை நிரூபித்து காட்டியவர். தன்னை வெறுத்த பலரையும் தன் ரசிகர்களாக இழுத்துக் கொண்டவர். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது அரசியலிலும் மக்களின் “நாளைய தீர்ப்பை” எதிர்நோக்கும் ஆளுமையாகவும் பரிணமித்துள்ளார்.
வயது என்பது வெறும் எண் தான், என்பது போல 50 வயதிலும் இளமை மாறா இளைஞனாக பம்பரமாய் சுற்றி வருகிறார் விஜய். தமிழக மக்களின் நெஞ்சில் என்றென்றும் குடியிருக்கும் தளபதியின் இந்த 50 வது பிறந்தநாளில் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும் அவரது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியும் வரும் நிலையில் விஜய்க்கு தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.
- Advertisement -