எல்லோரும் காட்டிய அன்பும் ஆசிகளும் என்னை நெகிழ வைத்ததது. அது என்றென்றும் என் மனதில் நிறைந்திருக்கும் ஒரு இனிய நினைவாகும் என்று நடிகர் வசந்த் ரவி ரசிகா்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.சில சிறப்பான தருணங்கள் அன்பும் சிந்தூரமும் ஒளிவிடும் நினைவுகளாக மாறுகின்றன. நேற்று என் பிறந்த நாளாக இருந்தது மட்டுமல்ல, நீங்கள் எல்லோரும் காட்டிய அன்பும் ஆசிகளும் என்னை நெகிழ வைத்ததாலேயே, அது என்றென்றும் எனது மனதில் நிறைந்திருக்கும் ஒரு இனிய நினைவாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, எனது பிரியமான சினிமா துறை நண்பர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும், என்னை ஆதரித்து அன்பு செலுத்தும் என் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் ஒவ்வொரு வாழ்த்தும் என் இதயத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது. உங்கள் அன்பும் அக்கறையும் எனக்குள் ஒரு புதிய உற்சாகத்தையும், எல்லைகளைத் தாண்டி சிறப்பாக வெற்றி காணும் முனைப்பையும் உருவாக்குகின்றன. நீங்கள் எனக்கு தந்த அந்த புன்னகையை மறக்க முடியாது. மீண்டும் ஒருமுறை, உங்களுக்குத் தனிப்பட்ட நன்றியினை தெரிவிக்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து, என்னுடைய எதிர்வரும் படங்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்வதற்காக காத்திருக்கிறேன்.
இந்த படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன…. ‘எல்ஐகே’ படம் குறித்து விக்னேஷ் சிவன்!