நடிகர் விக்ரம் பிறந்தநாளை அடுத்து தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் ‘தங்கலான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. கோலார் தங்கச் சுரங்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.


நடிகைகள் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பசுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
KE ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
வித்தியாசமான கதைக்களத்துடன் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடிகர் விக்ரமின் பிறந்தநாளை அடுத்து படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஒவ்வொரு காட்சியில் மிகவும் மெனக்கெட்டு செதுக்கி இருக்கிறார் ரஞ்சித். படம் கண்டிப்பாக இந்திய சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரமின் தரமான நடிப்பை இந்தப் படத்தின் மூலம் காணப்போவது உறுதியாகியுள்ளது.


