Homeசெய்திகள்சினிமாரஜினிக்கு மகனாக நடிக்கும் பகத் பாஸில்.... 'வேட்டையன்' பட அப்டேட்!

ரஜினிக்கு மகனாக நடிக்கும் பகத் பாஸில்…. ‘வேட்டையன்’ பட அப்டேட்!

-

- Advertisement -

ரஜினிக்கு மகனாக நடிக்கும் பகத் பாஸில்.... 'வேட்டையன்' பட அப்டேட்!நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினி தனது 170 ஆவது படத்தில் நடித்து வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிடும் டிஜே ஞானவேல் இயக்கத்திலும் உருவாகி வரும் தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. டீசருடன் வெளியான டைட்டில் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்த அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ரஜினிக்கு மகனாக நடிக்கும் பகத் பாஸில்.... 'வேட்டையன்' பட அப்டேட்!

இந்நிலையில் வேட்டையன் படத்தில் புதிய அப்டேட்கள் கிடைத்துள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் பகத் பாசில் ரஜினிக்கு மகனாக நடிக்கிறார் என்றும் ராணா ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்றும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் துஷாரா விஜயின் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரஜினியின் மகனாக நடிக்கிறார். இருந்தபோதிலும் ஜெயிலர் படத்தைப் போல பல நடிகர்கள் படத்தில் நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகமாகி வருகிறது.

MUST READ