நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பானா காத்தாடி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார். இவ்வாறு தனது நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள சமந்தா கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ஒரு வருடம் நடிப்பதிலிருந்து விலகி இருந்த இவர் தற்போது உடல் நலம் தேறி மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தா படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்ததாக கூறியிருக்கிறார். அதாவது குஷி படத்தை முடித்த பின்னர் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வந்த சமந்தா அந்த வெப் தொடரில் அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததால் படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த சமயத்தில் தனக்கு அல்கேஷ் உதவியாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
நடிகை சமந்தா, அடுத்த ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.