நடிகர் கவின், லிஃப்ட், டாடா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு கிஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிளடி பெக்கர், மாஸ்க் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள கவின் நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் கவினின் லைன் அப்பில் சில்லுனு ஒரு காதல் 2 திரைப்படமும் இருக்கிறது.
அதாவது கடந்த 2006 இல் சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல். ஒபேலி N கிருஷ்ணா இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து ஒபேலி N கிருஷ்ணா சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகவும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.
இந்நிலையில் கவின், இன்று (ஜூன் 22) தனது 34 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே இதன் மூலம் நடிகர் கவின் சில்லுனு ஒரு காதல் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ள தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் பிரபல பாலிவுட் நடிகை இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்றும் புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த நடிகை யார் என்பது குறித்து தகவல் அடுத்த அடுத்த நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.