spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதொழில் அதிபராக மாறிய பிரபல பாலிவுட் நடிகை

தொழில் அதிபராக மாறிய பிரபல பாலிவுட் நடிகை

-

- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை தற்போது தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார்.

பாலிவுட்டில் தொடக்கத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை சன்னி லியோன். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் நல்ல திரைக்கதை கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உருவெடுத்த அவர், 2014-ம் ஆண்டு ஜெய் நடித்த வடகறி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆகினார். பாலிவுட் நடிகையாக இருந்தாலும் அவருக்கு தமிழில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். வடகறி படத்திற்கு பிறகு மம்மூட்டி நடித்த மதுரராஜா மற்றும் ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

we-r-hiring
இது தவிர இந்தி மற்றும் தமிழ் மொழியிலும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை சன்னி லியோன் தற்போது தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரில் அவர் புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளார். மதுபானம் மற்றும் பார் உள்ளிட்ட வசதிகளுடன் நட்சத்திர விடுதிகளுக்கு ஈடாக இந்த உணவகத்தை கட்டியுள்ளார் நடிகை சன்னி லியோன். இந்த உணவகத்திற்கு சிக்கா லோகா என்று பெயர் வைத்திருக்கின்றனர். தற்போது நொய்டாவில் மட்டும் தொடங்கியிருக்கும் இந்த உணவகத்தை விரைவில் இந்தியா முழுவதும் திறக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.

திறப்பு நாள் சலுகையாக ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தி உணவகத்தில் உள்ள அனைத்து விதமான உணவையும் சுவைத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளாராம். நடிப்பு மட்டுமன்றி தொழிலும் பல நடிகர், நடிகைகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், சன்னி லியோனும் தொழில் அதிபராக மாறியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ