பிரபல இந்தி நடிகையான சகாரிகா காட்கே கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சக் தே! இந்தியா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதற்கு முன்னதாக இவர் ஒரு மாடல் அழகியாக வலம் வந்தார். முதல் படத்திலேயே ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றினார். ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியான சக் தே! இந்தியா படத்தில் சகாரிகா காட்கே ,தேசிய ஹாக்கி அணியின் வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இந்தியா முழுவதும் சகாரிகா காட்கேவின் பெயர் பேசும்படி அமைந்தது. இந்த படத்தில் சகாரிகா காட்கே, ப்ரீத்தி சபர்வால் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சக் தே! இந்தியா படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து மைலே நா மைலா ஹம் , தில்டாரியன், இரடா போன்ற வெற்றி படங்களை நடித்து அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இவர் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ஷாகிர் கானை மணமுடித்தார். இவர் திருமணத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சகாரிகா காட்கேவை திரையில் காண முடிவதில்லை என்றும் அவரை மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து படங்களிலும் வெற்றி கண்ட பிரபல இந்தி நடிகை…..சினிமாவை விட்டு விலகியதால் ரசிகர்கள் வருத்தம்!
-
- Advertisement -