spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர்.... தந்தை உயிரிழப்பு!

விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர்…. தந்தை உயிரிழப்பு!

-

- Advertisement -

பிரபல மலையாள நடிகரின் தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர்.... தந்தை உயிரிழப்பு!மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழ் மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். இந்நிலையில் தான் இவர் மருத்துவ சிகிச்சைக்காக தனது குடும்பத்தினருடன் நேற்று (ஜூன் 5) இரவு கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்தார். அப்போது காரை அனீஸ் என்பவர் ஒட்டி சென்றார். இன்று (ஜூன் 6) அதிகாலை இவருடைய கார் தர்மபுரியை கடந்து பாலக்காடு வழியாக செல்லும்போது லாரி ஒன்று இவருடைய கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர்.... தந்தை உயிரிழப்பு!இந்த விபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஷைன் டாம் சாக்கோவும், அவருடைய தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

MUST READ