spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிரையுலகில் துயரம்.... பிரபல துணை நடிகர் ஆர்எஸ் சிவாஜி மறைவு!

திரையுலகில் துயரம்…. பிரபல துணை நடிகர் ஆர்எஸ் சிவாஜி மறைவு!

-

- Advertisement -

நடிகர் ஆர்எஸ் சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66.

தமிழ் சினிமாவில் பிரபல துணை நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆர்எஸ் சிவாஜி. இவர் தமிழ் சினிமாவில் துணை இயக்குனர், ஒலி வடிவமைப்பாளர் ,மற்றும் இணை தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

we-r-hiring

இவர் பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் நடிகராக தனது வாழ்வை துவங்கினார். மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், சத்யா, சின்ன வாத்தியார், பூவே உனக்காக, அன்பே சிவம், ஆய்த எழுத்து, உன்னை போல் ஒருவன், வனமகன், 8 தோட்டாக்கள் என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே  இவரை கமல்ஹாசன் நடித்த அதிக படங்களில் இவரைப் பார்க்கலாம். கடைசியாக நடிகை சாய் பல்லவி நடித்த கார்கி படத்தில் அப்பாவாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நீண்ட நாட்கள் இதய பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஆர்எஸ் சிவாஜி தற்போது காலமானார். அவரின் மறைவுக்கு திரை உலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ