spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுதல் நாள் வசூல் ரூ.25 கோடி- நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’

முதல் நாள் வசூல் ரூ.25 கோடி- நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’

-

- Advertisement -

ரூ.25 கோடியை வசூலித்த நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’

முதல் நாளில் ரூ.25 கோடியை வசூலித்த நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’

நானி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘சூர்யாவின் சனிக்கிழமை’ (சரிபோதா சனிவாரம்) திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. இவர் இயக்கியுள்ள படம் ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram). இப்படம் தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என பெயரிடப்பட்டது.

we-r-hiring

தமிழில் இப்படம் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற தலைப்பில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரூ.25 கோடியை வசூலித்த நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’

 

ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம்  ‘மாஸ்’ திரைப்படமாக உருவாகியுள்ளது.  இப்படம் நேற்று (ஆகஸ்ட் 29) திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளில் உலக அளவில் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஹ்மான் மகள் என்று பார்க்காமல் கத்தீஜாவாக பார்த்தார்கள், மகிழ்ச்சி! 

இப்படம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவானதாக என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ