Homeசெய்திகள்சினிமாஃபைட் கிளப் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

ஃபைட் கிளப் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

-

விஜயகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஃபைட் கிளப் படத்திலிருந்து யாரும் காணாத விண்மீனே என்ற பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியுடன் கை கோர்த்த லோகேஷ் கைதி படத்தை இயக்கினார் இத்திரைப்படம் மெகாஹிட் அடித்தது. மேலும், லோகேஷை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும் உயர்த்தியது. ஆரம்பம் முதலே சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி அதில், வெற்றியும் கண்டு வருகிறார். டாப் நடிகர்களை வைத்து சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனும் திரை உலகத்தை தொடக்கி வைத்த பெருமையும் லோகேஷ் கனகராஜை தான் சேரும் .அடுத்ததாக இவர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அத்தயாரிப்பு நிறுவனத்திற்கு G SQUAD என பெயர் வைத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக உறியடி பட புகழ் விஜய் குமாரின் படத்தை அவர் தயாரிக்கிறார். அப்பாஸ் ரஹ்மத் இயக்கும் இப்படத்தில், மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து, படத்தின் டீசர் வெளியானது. அதிரடி ஆக்‌ஷன் நிறைந்ததாக வெளியானது ஃபைட் கிளப் முன்னோட்டம்.

இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். யாரும் காணாத விண்மீனே எனத் தொடங்கும் இப்பாடலை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். வரும் டிசம்பர் 15-ம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

MUST READ